Malaysian Attention Engine
Live wire
45King calls for schools to close if API stays above 150-180 for prolonged period40Cuba langgar bot Maritim, dua lelaki diberkas bersama ganja RM455,00040World : Egypt President To Begin Two-Day State Visit To Malaysia39Cubaan seludup syabu: Jet peribadi disewa RM200,00039Man shot during reported ICE operation in New York39Syarikat perladangan Malaysia di luar negara wajib patuhi undang-undang, cegah dan kawal kebakaran - KPK38Belanjawan 2027: Pembangkang sifatkan 'belanjawan pilihan raya'37Sport : ACC: Xisco Munoz Hails JDT After 6-0 Win Over PKR Svay Rieng FC36World : US Sanctions 17 Vessels Linked To Iran's 'Shadow Fleet'36Belanjawan 2027: Rakyat dijangka nikmati lebih banyak manfaat35Indonesia kenal pasti 198 suspek, pergiat penguatkuasaan tangani kebakaran hutan33General : PM Anwar To Table 2027 Budget In Dewan Rakyat This Afternoon
NewUnconfirmedupdated 7 h ago

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமா கைவிடாது – ஜான்வி கபூர்

Only social or community posts, or a single source.

Attention
15
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 17:15 MYTLatest activity 9 Oct, 17:15தமிழ்confidence 60%

What happened

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் நம்மை சினிமா கைவிடாது என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். (Makkal Osai, 17:15)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமா கைவிடாது – ஜான்வி கபூர்

By tamil · 9 Oct, 17:15 MYT

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் நம்மை சினிமா கைவிடாது என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, பாலிவுட் சென்றும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த நடிகை ஜான்வி கபூர், தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.

இந்தி தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் ஜான்வி கபூர் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனது திரைப்பயணம் குறித்து ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.

சினிமா கைவிடாது

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “சினிமா என்பது என் ரத்தத்தில் ஏறிய ஒன்று. தாயார் வழியில் நானும் சினிமாவில் களமிறங்கினேன். இப்போது எனக்கு எல்லாமே சினிமாதான் என்றாகி விட்டது. ஒவ்வொரு நாளும் சினிமாவில் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் இந்த சினிமா நம்மை கைவிடாது என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவுக்கு உண்மையாகவே இருக்கிறேன்.

கவலையில்லை

என்னை பொறுத்தவரை நான் விமர்சனங்களுக்கு என்றுமே பயந்தது கிடையாது. என்னை பற்றிய நேர்மறையான விமர்சனங்களையும், எனக்கான அறிவுரைகள் கொண்ட விமர்சனங்களையும் தலைவணங்கி ஏற்பேன். அதேவேளை திட்டமிட்டு வரும் தனிநபர் விமர்சனங்களை நான் ஏற்கவே மாட்டேன். எனவே விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை.

கடமையை செய்கிறேன்

என்னை பொறுத்தவரை நடிக்கும் அத்தனை படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். கதைகளையும் அவ்வாறே தேர்வுசெய்து நடித்து வருகிறேன். சினிமா பிரபலம் என்பதற்காகவே விமர்சித்து பேசி, மகிழ ஒரு கூட்டம் உண்டு. அது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்களை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. நான் என் கடமையை செய்கிறேன். நான் யார் என்பது என்னை பற்றி உணர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

The post கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமா கைவிடாது – ஜான்வி கபூர் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow20:0023:00
Latest 01:00 MYT
15New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
9 Oct, 17:15 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    17:15

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமா கைவிடாது – ஜான்வி கபூர் · Malaysian Attention Engine