
SIR Protest: பெங்களூருவில் CJP போராட்டம் - அபிஜித் தீப்கே, துருவ் ரத்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு - வீடியோ வைரல்
Only social or community posts, or a single source.
What happened
SIR Protest: பெங்களூருவில் CJP போராட்டம் - அபிஜித் தீப்கே, துருவ் ரத்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு - வீடியோ வைரல் (Google News Malaysia (TA), 15:01)
Read the reporting
1 report
SIR Protest: பெங்களூருவில் CJP போராட்டம் - அபிஜித் தீப்கே, துருவ் ரத்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு - வீடியோ வைரல்
இந்தியா
SIR Protest: பெங்களூருவில் CJP போராட்டம் - அபிஜித் தீப்கே, துருவ் ரத்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு - வீடியோ வைரல்
பெங்களூரு ப்ரீடம் பூங்காவில் போராட்டம் நடைபெறுகிறது.
Summary
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிஜேபி நடத்தும் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் பிரபல யுடியூபர் துருவ் ரத்தி கலந்துகொள்கிறார்.
எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நியாயமற்ற முறையில் பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கர்நாடகாவில் பெங்களூரு ப்ரீடம் பூங்காவில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர் இயக்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துகின்றன.
மக்கள் தீர்ப்பாயம் என்ற பொருண்மையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபல யூடியூபர் துருவ் ரதி ஆகியோர் பங்கேற்கின்றனர். துருவ் ரதி பெங்களூரு வருவது இதுவே முதல் முறை.
போராட்டத்தில் பங்கேற்க சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, துருவ் ரத்தி ஆகியோர் நேற்றே பெங்களூரு வந்தடைந்தனர். துருவ் ரதியும் இந்த நிகழ்வில் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தும் ஒரு பிரத்யேக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வாக்கைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் மக்கள் தீர்ப்பாயம் இன்று நடைபெறுகிறது.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எஸ்ஐஆர்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியமளிப்பதற்காக தீர்ப்பாயத்திற்கு நேரில் வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அதிகாரிகளால் 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு எதிராக 'காலணிப் போராட்டம்' நடத்த சிஜேபி திட்டமிட்டுள்ளது.
சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா, செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், முக்கிய மாணவர் தலைவர் ஐஷே கோஷ், அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா மற்றும் பல்வேறு இளைஞர், மக்கள் அமைப்புகள் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளனர்.
தேர்தல் மற்றும் எஸ்ஐஆர் முறைகேடுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் சிஜேபி கோரி வருகிறது.
அவர் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தருக்குப் பேரணி செல்வோம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் எஸ்ஐஆருக்கு பின் வெளியிடப்பட்ட பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 1.08 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக உள்ளன என்று 'சவுத் மேட்டர்ஸ்' அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 2025 முதல் 19 மாநிலங்களில் மொத்தம் 13 கோடி மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Maalai Malar
www.maalaimalar.com
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
- DetectedFirst detected (Google News Malaysia (TA)) source
- StateOver
single source and no mention for 24h
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)15:01
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.