
தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு
Only social or community posts, or a single source.
What happened
தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு (Google News Malaysia (TA), 12:34)
Read the reporting
2 reports
தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு
வணிகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு
சென்னை: கடந்த 2 நாட்கள் மாற்றமின்றி விற்பனையாகிவந்த தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (அக்.9) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் (அக்டோபர்) மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாட்களாக 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13710-க்கு விற்பனையானது.
இன்றைய விலை விவரம்
இந்நிலையில், சென்னையில் இன்று (அக்.9) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,815-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,10,520-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,20,568-க்கும், 18 காரட் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.90,800-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் 2-ம் தொடங்கி இன்றுவரை வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வெற்றி | இடைத்தேர்தல் முடிவுகள்
Hindu Tamil Thisai
www.hindutamil.in
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)12:34
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 2 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (4)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.