Malaysian Attention Engine
Live wire
52Polis tahan suspek kes kejar mengejar di PJ50Nahas 11 kenderaan: Pemandu lori positif dadah | Sinar Harian47World : Russell Tops Sole Practice Session For F1 Singapore Grand Prix44General : Road Transport Act To Be Amended To Compel Compensation From Drunk Drivers - PM Anwar41Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi40General : MEF Welcomes RM2,000 Minimum Wage, MSME Exemption40World : Egypt President To Begin Two-Day State Visit To Malaysia39General : Budget 2027: Individual Tax Relief Raised To RM12,000 - PMm Anwar37Gempa bumi kuat 7.7 magnitud gegar Panama37General : Budget 2027: RM160 Mln Package To Boost e-Hailing, p-Hailing Workers' Income36Kos operasi melonjak 52 peratus, pendapatan pesawah Kedah, Perlis terjejas36Sport : Denmark Open: Kai Wun-Wei Chong Targets Top Ten Ranking
NewUnconfirmedupdated 2 h ago

ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை

Only social or community posts, or a single source.

Attention
17
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 10 Oct, 07:30 MYTLatest activity 10 Oct, 07:30தமிழ்confidence 60%

What happened

புதுடெல்லி: மருத்துவ விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நோயாளிகளைக் கவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Makkal Osai, 07:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை

By tamil · 10 Oct, 07:30 MYT

புதுடெல்லி: மருத்துவ விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நோயாளிகளைக் கவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகள் கூறியதாகப் போலியான கருத்துகள், சிகிச்சை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்கக் கூடாது என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணமடையலாம் என்றும், ஒரு மருத்துவர்தான் சிறந்தவர் அல்லது நம்பர் ஒன் மருத்துவர் என்றும் ஆதாரமற்ற விளம்பரங்களை வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், விளம்பர நிறுவனங்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் அல்லது இணையதளங்களுக்குப் பணம் கொடுத்து நோயாளிகளைப் பரிந்துரைக்கச் செய்யும் நடைமுறைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதேபோல், இணையதளங்களில் தேடல் முடிவுகளிலும் செயலிகளிலும் பணம் செலுத்தி தங்களது தரவரிசையை செயற்கையாக உயர்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நோயாளிகளின் புகைப்படங்கள், சிகிச்சைக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட படங்கள், நோயாளிகளின் கருத்துகள் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

புதிய வழிகாட்டுதல்களை மீறும் மருத்துவர்களுக்கு அபராதம் மற்றும் மருத்துவப் பணியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் மருத்துவப் பதிவேட்டில் உள்ள பதிவை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை நீக்கவும் வழிகாட்டுதல்களில் வகை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார விழிப்புணர்வுப் பதிவுகளுக்கு அனுமதி

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சமூக வலைதளங்களில் உடல்நலம் தொடர்பான உண்மையான, ஆதாரபூர்வமான விழிப்புணர்வுத் தகவல்களைப் பகிர்வதற்குத் தடை இல்லை. ஆனால், அவை நோயாளிகளைக் கவரும் வகையிலான தவறான விளம்பரங்களாக இருக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

The post ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 30NEWnow09:00
Latest 09:28 MYT
17New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
10 Oct, 07:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    07:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.