
எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழியில்லை! ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம்
Only social or community posts, or a single source.
What happened
எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழியில்லை! ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம் (Google News Malaysia (TA), 10:32)
Read the reporting
2 reports
ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் முடிவுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
- எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் போர் உலகளாவிய எரிசக்தி விலைகளைத் தொடர்ந்து பாதித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உடனடியாக 3 லட்சம் டன் டீசலை "அமெரிக்க மற்றும் உலகச் சந்தைக்கு" அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் டீசல் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் வரிகளையும் விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் சில வாரங்களுக்கு முன்புதான் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கச் சட்டங்களை மீறுவதாகக் கருதும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில மக்கள் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசலை அனுப்புவதைத் தொடர்ந்து, நவம்பரில் 5 லட்சம் டன்னும், அதற்குப் பிறகு மேலும் 10 லட்சம் டன்னும் ரஷ்யா வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரின்போது யுக்ரேன் தாக்குதல்களுக்கு உள்ளான ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையைப் பொறுத்து, குறுகிய காலத்துக்குள் மேலும் 30 லட்சம் டன் டீசல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக நமது சிறந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கும் எரிபொருள் விலையைக் குறைப்பதே எனது மிக முக்கிய முன்னுரிமை" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் டீசல் ஏற்றுமதி மாதத்துக்கு 30 லட்சம் டன்னை எட்டக்கூடும் என்று ரஷ்ய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான டாஸ் செய்தி நிறுவனத்திடம் அந்நாட்டின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்தார். டிரம்ப் குறிப்பிட்ட அளவுகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தம் புதினுக்கு வழங்கப்படும் பரிசு என்றும், இது "முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு போரில் செய்யப்படும் முதலீடு" என்றும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகளை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகத் தெரிகிறது. எனினும், அமெரிக்க வங்கிகளில் உள்ள சொத்துகள் போன்ற பிற ரஷ்யச் சொத்துகள் மீதான முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.
நான்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மூன்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஏழு அமெரிக்க செனட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இந்த ஒப்பந்தம் அமெரிக்கச் சட்டங்களை மீறுவதாகக் கூறினர். இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறும் அவர்கள் டிரம்பை வலியுறுத்தினர்.
"யுக்ரேன் பொதுமக்களை ரஷ்யா தொடர்ந்து கொன்று வரும் நிலையில், புதினின் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா நிதி ஆதரவளிக்கக் கூடாது" என்று அந்த செனட்டர்கள் தெரிவித்தனர்.
2022-ஆம் ஆண்டிலேயே ரஷ்ய எரிசக்திப் பொருள்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க நாடாளுமன்றம் வெளிப்படையாகத் தடை விதித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
"யுக்ரேனுக்கு எதிரான புதினின் கொடூரமான போருக்கு அமெரிக்க டாலர்கள் நிதியளிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம்" என்றும் அவர்கள் கூறினர்.
இந்த அறிக்கையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, தோம் டில்லிஸ், ஜான் கர்டிஸ் ஆகியோரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜீன் ஷாஹீன், ரிச்சர்ட் புளூமெந்தால், ரான் வைடன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. டிரம்புடன் பல்வேறு விவகாரங்களில் மோதியுள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மாஸ்ஸி, அனைத்து பெட்ரோலியப் பொருள்கள் மீதான தடைகளையும் அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிபொருள் விலைகளைக் குறைக்க அமெரிக்காவிடம் ஏற்கெனவே உள்ள சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதற்கு மாறாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்

பட மூலாதாரம், Drew ANGERER / AFP via Getty Images
பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது போரைத் தொடங்கியதில் இருந்து உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய்யின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, அமெரிக்கர்களுக்கு எரிபொருள் விலை உயர்வு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தத் தேர்தல்கள், நாடாளுமன்றத்தில் டிரம்பின் குடியரசுக் கட்சி தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்பதைத் தீர்மானிக்கும்.
பொருளாதாரத்தையும் இரானுடனான போரையும் டிரம்ப் கையாளும் விதம் குறித்து பெரும்பாலான அமெரிக்கர்கள் அதிருப்தி தெரிவிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இதனால், தனது கட்சி எதிர்கொள்ளும் அரசியல் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளை அவர் தேடி வருகிறார்.
இந்தப் போரின் பாதிப்புகள் அமெரிக்காவின் விவசாயத்தைச் சார்ந்த மாகாணங்களில் தீவிரமாக உணரப்படுகின்றன. விவசாய இயந்திரங்களை இயக்கவும், விளைபொருள்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் இந்த மாகாணங்கள் டீசலை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
அமெரிக்காவில் தற்போது ஒரு கேலன் டீசலின் சராசரி விலை 6.28 டாலராக உள்ளது என்று அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் இறுதியில் பதிவான 6.53 டாலர் என்ற வரலாறு காணாத உச்ச விலையிலிருந்து இது குறைந்துள்ளது.
இவ்வளவு அதிக அளவு டீசலை வழங்கும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளதா என்பதையும், அவ்வாறு வழங்கினால் அமெரிக்க நுகர்வோருக்கான விலைகள் எந்த அளவுக்குக் குறையும் என்பதையும் ஆய்வாளர்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

பட மூலாதாரம், EPA/Shutterstock
அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 36 லட்சம் பேரல் டீசல் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மாதம் ரஷ்யா உறுதியளித்த 3 லட்சம் டன் டீசலை வழங்கினால்கூட, அது அமெரிக்காவின் ஒருநாள் டீசல் நுகர்வில் ஏறத்தாழ பாதியளவுக்குச் சமமாக இருக்கும்.
ரஷ்யாவுடனான டீசல் ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரிட்டன் பாதுகாப்புத் துறைச் செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் உள்ளிட்ட பல சர்வதேசத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளனர்.
ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்காவும் யுக்ரேனின் பிற நட்பு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, ரஷ்யாவும் யுக்ரேனும் "எரிசக்திப் போர் நிறுத்தத்துக்கு" ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
எனினும், இது தொடர்பாக அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். ஆனால், ரஷ்யா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)10:32
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 5 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (5)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
