கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து
Only social or community posts, or a single source.
What happened
டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. SIR-க்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நாளை ஜந்தர் மந்தரில் CJP போராட்டம் நடத்தவுள்ளதால் நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. (Google News Malaysia (TA), 16:20)
Read the reporting
7 reportsகரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் டெல்லியில் கைது
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் சனிக்கிழமை (அக்டோபர் 10) போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கரப்பான்பூச்சி ஜனதா அமைப்பின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.போராட்டத்துக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை, தடையை மீறி போராடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதனால், டெல்லியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள், வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் ஏற்படுத்த முயல்வதாக சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், சவுத் அவென்யூவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகள் அருகே ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, அவரது கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேபோல, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜந்தர் மந்தர் செல்வதைத் தடுக்கும் வகையில் லோதி எஸ்டேட்டில் உள்ள அவரது வீட்டிலேயே காவல்துறையினர் முடக்கினர்.
பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், ஏஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் பேரணியாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
படம்: இபிஏ
போராட்டக் களத்தை ‘டெல்லி ஹாட்’ பகுதிக்கு மாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை அங்குள்ள சந்தையை மூடி, அப்பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
தடையை மீறி போராடுபவர்களை கைது செய்வதற்காக 4,000 பெண் காவல்துறையினர் உட்பட 15,000 காவல்துறையினர், 26,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் உட்பட 40,000க்கும் அதிகமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
படம்: ராய்ட்டர்ஸ்
நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், ஆங்காங்கே திரண்ட போராட்டக்காரர்களை உடனுக்குடன் கைது செய்து தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு சென்றனர். சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை 5,000க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அபிஜித்தின் பாட்டி மரணம்
இந்நிலையில் அபிஜித் தீப்கேவின் 85 வயதுப் பாட்டி சனிக்கிழமை பிற்பகலில் காலமானார். காவலில் வைக்கப்பட்டுள்ள அபிஜித்திடம் இந்தத் துயரச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது போராட்டத்தைத் தொடரப் போகிறாரா அல்லது இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த ஊர் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நாளை நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய டெல்லி முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி நூற்றுக்கணக்கான மாணவர்கள் குருத்வாராவிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.
படம்: இபிஏ
நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 45 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வரவிருந்த விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சில்லறை மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.
“எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போராட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சிறை செல்லவும் தான் தயாராக இருக்கிறேன்,” என்று மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அபிஜித் தீப்கே கூறினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதற்காகவே ஒட்டுமொத்தத் தலைநகரமும் முடக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தேசியத் தலைநகரில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் போராட்டம், திமுக எம்.பி.க்கள் கைது
இதற்கிடையே, டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னை பெசன்ட் நகரில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
படம்: இபிஏ
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)16:20
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 6 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (9)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
