தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக
Only social or community posts, or a single source.
What happened
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் கு. சேது செல்வம் டெபாசிட்டை இழந்தார். (Makkal Osai, 13:15)
Read the reporting
1 reportதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் கு. சேது செல்வம் டெபாசிட்டை இழந்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் விநாயகம், தி.மு.க., சேது செல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 பேர் வாக்களித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகியிருந்தன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் ஓட்டுகள் குறைந்திருந்தது.
ஓட்டுபதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணட்டது. அடுத்து மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்கள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் வெற்றியை உறுதி செய்து வந்தார். இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%) ஆகும். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 80.81 சதவிகிதம் ஆகும்
2-வது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.
இந்த நிலையில், மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் சேது, டெபாசிட் தொகையை இழந்துள்ளார். டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
The post தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai13:15
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.