எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ்…
Only social or community posts, or a single source.
What happened
எஸ்.ஐ.ஆர் மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். (Makkal Osai, 17:15)
Read the reporting
1 reportஎஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ்…
எஸ்.ஐ.ஆர் மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர்கள் உள்பட பலர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மற்றும் செயல்பாட்டாளரான பிரகாஷ் ராஜ், தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்
13 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒட்டுமொத்த குடிமக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரான அச்சுறுத்தல். என்னுடைய ஒரு வாக்கை நீங்கள் பறிக்கலாம், ஆனால் உங்களை அரியணையில் இருந்து இறக்க என்னால் பத்து வாக்குகளை மாற்றியமைக்க முடியும் என்று பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதாரங்களை அழிக்கும் திட்டமிட்ட சதி
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்பது வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சி மட்டுமல்ல; 2024-2025 முதல் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளுக்கான ஆதாரங்களை அழிக்கும் திட்டமிட்ட சதி என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் தனது பதவியைராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்!
The post எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ்… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai17:15
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.