Malaysian Attention Engine
Live wire
50World : Saudi Arabia Says 3 Killed In Attacks On Riyadh's King Khalid Airport45Pemuda UMNO, Pas beri isyarat sasar birukan Melaka44Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi43[VIDEO] Pikap tular dikejar polis miliki dadah, alatan curi kabel36General : Haze: Johor Extends Closure Of Schools, Educational Institutions Until Oct 1635Pendaki Malaysia yang disahkan selamat, hubungi keluarga 9 hari selepas banjir di Nepal34Sport : Arctic Open: Aaron-Roy King Reach Final, Zii Jia Bows Out34Tanah runtuh, banjir kilat landa Kundasang, kereta turut tersadai di tebing dihanyut arus34Indonesia guna cecair buatan Brazil padam kebakaran hutan31Pope Leo says will undergo surgery for small growth on lung31Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok3140 rumah, 2 jambatan gantung dihanyutkan banjir kilat di Nepal
NewUnconfirmedupdated 2 h ago

ஜோகூர் வீடமைப்பு உதவி: 21,236 பேருக்கு 8 கோடியே 41 லட்சம் வெள்ளி ஆறாம் கட்டத்தில் 6,110 பேருக்கு உதவி — டத்தோ ஜஃப்னி

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 11 Oct, 19:58 MYTLatest activity 11 Oct, 19:58தமிழ்confidence 60%

What happened

ஜோகூர் மாநிலத்தின் வீடமைப்பு உதவித் திட்டத்தின் முதல் ஆறு கட்டங்களின் வழியாக 21,236 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக மொத்தம் 8 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 500 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜஃப்னி தெரிவித்தார். லார்கின் அரேனா அரங்கில் நடைபெற்ற இத்திட்டத்தின் ஆறாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி நிறைவுசெய்ததாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார். (Makkal Osai, 19:58)

Read the reporting

1 report
Photo: Makkal Osai
Makkal Osai·News·தமிழ்·2 min read

ஜோகூர் வீடமைப்பு உதவி: 21,236 பேருக்கு 8 கோடியே 41 லட்சம் வெள்ளி ஆறாம் கட்டத்தில் 6,110 பேருக்கு உதவி — டத்தோ ஜஃப்னி

By Selvi Thirunavukkarasu · 11 Oct, 19:58 MYT

ஜோகூர் மாநிலத்தின் வீடமைப்பு உதவித் திட்டத்தின் முதல் ஆறு கட்டங்களின் வழியாக 21,236 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக மொத்தம் 8 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 500 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜஃப்னி தெரிவித்தார். லார்கின் அரேனா அரங்கில் நடைபெற்ற இத்திட்டத்தின் ஆறாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி நிறைவுசெய்ததாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆறாம் கட்டத்தில் மட்டும் 6,110 பயனாளிகளுக்காக 2 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வீடு வாங்குவதற்கான உதவியை 3,700 பேரும், புதிய வீட்டில் குடியேறுவதற்கான உதவியை 620 பேரும், வாடகை வீட்டு உதவியை 1,790 பேரும் பெறுகின்றனர் என்று அவர் கூறினார். வீடு வாங்குவோருக்கு 5,000 வெள்ளி, புதிய வீட்டில் குடியேறுவோருக்கு 2,000 வெள்ளி, வாடகை வீட்டில் வசிப்போருக்கு 2,500 வெள்ளி வழங்கப்படுகிறது. குடும்பங்களின் வெவ்வேறு வீடமைப்புத் தேவைகளைக் கருத்தில்கொண்டு இந்த உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

“வீட்டின் சாவியைப் பெற்றுவிட்டதால் ஒரு குடும்பத்தின் அனைத்துச் சுமைகளும் முடிந்துவிடுவதில்லை. குடியேறும் செலவுகளும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அவர்களுக்கு இருக்கின்றன. அதேவேளையில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்,” என்று ஜஃப்னி தெரிவித்தார். முதல் கட்டத்தில் 1,020 பேர், இரண்டாம் கட்டத்தில் 2,506 பேர், மூன்றாம் கட்டத்தில் 600 பேர், நான்காம் கட்டத்தில் 5,000 பேர், ஐந்தாம் கட்டத்தில் 6,000 பேர் பயனடைந்துள்ளனர். ஆறாம் கட்டத்தில் மேலும் 6,110 பேருக்கு உதவி வழங்கப்படுவதன் வழியாக இத்திட்டத்தின் பயன் விரிவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

மந்திரி பெசாரின் முன்முயற்சியில் உருவான இத்திட்டம், மக்களின் வீடமைப்புச் சுமையைக் குறைப்பதற்கு மாநில அரசு அளிக்கும் முன்னுரிமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஜோகூர் வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்புத் திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுவரை 25,791 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஜஃப்னி தெரிவித்தார். எஞ்சிய 4,209 வீடுகளை நான்காம் காலாண்டில் முடித்து, 2022–2026 காலத்திற்கான 30,000 வீடுகள் இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதலாக 70,000 வீடுகளை அமைத்து, 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ஒரு லட்சம் வீடுகளை வழங்குவதே இலக்கு என்று அவர் கூறினார்.

இளம் தம்பதியரும் நீண்டகாலமாக வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களும் சொந்த வீடு பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்த இந்த முயற்சி தொடரும் என்றார் அவர்.உதவி கிடைக்காத விண்ணப்பங்களில் முழுமையற்ற ஆவணங்கள், விற்பனை–கொள்முதல் ஒப்பந்தத் தேதி, சாவி ஒப்படைப்புத் தேதி தொடர்பான சிக்கல்கள், ஏற்கெனவே வீடு வைத்திருத்தல், தகுதி நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாமை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். விண்ணப்பங்களின் நிலையை மக்களுக்குத் தெளிவாக விளக்குவதோடு, ஆவணச் சரிபார்ப்பையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்திற்குப் பின்னாலும் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க எதிர்பார்க்கும் ஒரு குடும்பம் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஜஃப்னி வலியுறுத்தினார்.

கோகி கருணாநிதி

The post ஜோகூர் வீடமைப்பு உதவி: 21,236 பேருக்கு 8 கோடியே 41 லட்சம் வெள்ளி ஆறாம் கட்டத்தில் 6,110 பேருக்கு உதவி — டத்தோ ஜஃப்னி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow21:0022:00
Latest 22:21 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
11 Oct, 19:58 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    19:58

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

ஜோகூர் வீடமைப்பு உதவி: 21,236 பேருக்கு 8 கோடியே 41 லட்சம் வெள்ளி ஆறாம் கட்டத்தில் 6,110 பேருக்கு உதவி — டத்தோ ஜஃப்னி · Malaysian Attention Engine