Malaysian Attention Engine
Live wire
54RIM mohon Dana Eksport Muzik dalam Belanjawan 202752Sport : ACC: Xisco Munoz Hails JDT After 6-0 Win Over PKR Svay Rieng FC46Aina Abdul pertaruh lagu Bluest Sky, wakil negara ke Eurovision Asia46Amerika akan siarkan secara langsung hukuman mati Nidal Hasan43Ringgit eases vs US dollar, ends higher against Asean currencies39Trump says he will not attack before US elections in November39Kontroversi KP AKPS: AGC pulangkan kertas siasatan, arah lengkapkan keterangan Shuhaily dan CCTV39General : PM Anwar To Table 2027 Budget In Dewan Rakyat This Afternoon38Nahas 3 beranak: 'Niat nak sambut hari lahir anak tidak kesampaian, Allah lebih menyayangi mereka' - Suami3613 pelajar ‘bergasak’ guna senjata ditahan36General : Borrowers Facing Difficulties To Settle PTPTN Loan Can Negotiate For Loan Restructuring - MoHE35Bekas bintang Spurs cabar Infantino
NewUnconfirmedupdated 2 h ago

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல்

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 08:30 MYTLatest activity 9 Oct, 08:30தமிழ்confidence 60%

What happened

மாஸ்கோ ரஷியாவில் 2-வது நபருக்கு பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதுபற்றி உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது. (Makkal Osai, 08:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·2 min read

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல்

By tamil · 9 Oct, 08:30 MYT

மாஸ்கோ ரஷியாவில் 2-வது நபருக்கு பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதுபற்றி உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.

ரஷியாவின் சைபீரியாவில் இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தவர் டேரியா ஷிபிலோவா (வயது 28). கடந்த 2-ந்தேதி ஆய்வக பணியின்போது, பாக்டீரியாக்கள் இருந்த டெஸ்ட் டியூப் தவறுதலாக கீழே விழுந்து உடைந்தது. இதனை தொடர்ந்து, தொற்று பரவியதால் பெண் ஆராய்ச்சியாளருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.

அதன் தீவிர பாதிப்பால், கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக ரஷியாவில் பிளேக் நோய் பரவி வருவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பெண் ஆராய்ச்சியாளருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் என 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மற்றொரு நபருக்கு பாதிப்பு

இதற்கிடையே மற்றொரு நபருக்கு, பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியானது. ஆனால் இதனை ரஷிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, தொற்று பரவலால் மேலும் ஒரு நபர் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவலை நாங்கள் நிராகரிக்கிறோம். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களையே நம்ப வேண்டும் என கூறினார்.

உலக சுகாதார அமைப்பு

இதேபோன்று, ரஷியாவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு கூறும்போது, மக்களுக்கு தொற்றுநோய் அபாயம் எதுவும் இல்லை. பெண் ஆராய்ச்சியாளருக்கு அறியப்படாத காரணத்தால் நிமோனியா ஏற்பட்டது. அதேவேளையில் அவர் பணிபுரிந்த மையத்தில் இருந்த நோய்க்கிருமிகளால் அவருக்கு நோய் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தது.

இது தொடர்பாக ரஷியாவிடம் கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை இயக்குநர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, பெண் ஆராய்ச்சியாளர் எப்படி இறந்தார் என்பது பற்றி இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு சரியான நேரத்தில் தகவல் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ரஷியாவிடம் கூடுதல் விவரங்களை கேட்டு உள்ளோம் என்றார்.

5 ஆயிரம் ஆய்வகங்கள்

தொற்றுக்கு இளம்பெண் டேரியா மரணம் அடைந்த செய்தி அறிந்த அடுத்த நாளே உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பை தொடங்கியது. அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நிலைமையை பற்றி புரிந்து கொள்வதற்கும் மற்றும் தீவிர பொது சுகாதார பாதிப்பு பற்றி ஆய்வு செய்வதற்கும் கூடுதல் தகவல் தேவைப்படுகிறது என்றார்.

எனினும், ஏறக்குறைய 5 ஆயிரம் ஆய்வகங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதில், டேரியாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய பிளேக் நோய் பாதிப்புகள் காணப்படவில்லை என ரஷியா தெரிவித்து உள்ளது.

பிளேக் என்றால் என்ன?

பிளேக் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிர தொற்று நோயாகும்.

அறிகுறிகள்

இந்த பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு, திடீர் காய்ச்சல், குளிர் நடுக்கம், கடுமையான தலைவலி, உடல் வலி, சோர்வு, அதிகப்படியான பலவீனம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். பாதிப்பு தீவிரம் அடையும்போது, மருத்துவரை அணுகி சிகிச்சையையும் பெற்று கொள்ள வேண்டும்.

3 வகைகள்

நோய் பாதிப்புக்கு ஏற்ப, மூன்று முக்கிய வகைகளாக அது பிரிக்கப்படுகிறது. இதன்படி, முதல் வகை புபோனிக் பிளேக் என அழைக்கப்படுகிறது. இது நிணநீர் முனைகளில் பாதிப்பு ஏற்படுத்தும். அது வீக்கம் ஏற்பட்டு, வலியை தரும். இதனால் நிணநீர் பிளேக் என்றும் அது அழைக்கப்படுகிறது.

2-வது வகை செப்டிசிமிக் பிளேக் என அழைக்கப்படுகிறது. பாக்டீரியா நேரடியாக ரத்த ஓட்டத்தில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், ரத்த தொற்று பிளேக் என்றும் அது அழைக்கப்படுகிறது.

கொள்ளை நோய்

3-வது வகை நிமோனிக் பிளேக் ஆகும். காற்றில் பரவி நுரையீரலை பாதிக்க கூடிய ஆபத்து நிறைந்த வகையாகும். அறிகுறிகள் தென்பட்டவுடன், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பரவி கடும் விளைவை ஏற்படுத்த கூடும். இது நுரையீரல் பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பிளேக் நோய், ஐரோப்பிய நாடுகளில் 14-ம் நூற்றாண்டில் மக்களிடையே பரவி, கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன் பாதிப்புகளால், லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இதனால், இதனை கொள்ளை நோய் என்றும் அழைக்கிறார்கள்.

The post கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow09:0010:00
Latest 10:36 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
9 Oct, 08:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    08:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல் · Malaysian Attention Engine