Malaysian Attention Engine
Live wire
45General : Chinese Investors Eye Major Aluminium Investment In Sarawak - Ahmad Zahid40Najib sudah terima dokumen perintah tahanan rumah, mekanisme dirahsiakan - Peguam39Harris warns window closing for AI safeguards, urges US-China cooperation37Lelaki dipenjara lapan tahun tampar, pukul, paksa kanak-kanak makan najis37Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi36Tiada saksi kejadian, CCTV di asrama sekolah - penyiasat polis36General : Mini Tornado In Damansara Caused By Active Thunderstorm Clouds, Says MetMalaysia36Penjual buah maut, gerai dirempuh lori balak35Budak lima tahun maut dirempuh kereta pandu melulu di Jalan Kuching35World : IMF Chief Urges Urgent Fiscal Action As Global Economic Resilience Reaches Limits35Soon Huat-Shevon lolos, ujian getir menanti34New Zealand's international tourism nears pre-pandemic levels
NewUnconfirmedupdated 2 h ago

நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.

Only social or community posts, or a single source.

Attention
30
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 14 Oct, 19:48 MYTLatest activity 14 Oct, 19:48தமிழ்confidence 60%

What happened

மலேசிய தேசிய மனித உரிமைகள் சங்கம் (ஹக்காம்), நாட்டில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புப் பேச்சு மற்றும் விரோதப் போக்கு குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிராகத் தாங்களே நீதி வழங்க முயலும் தனிநபர்களின் நடவடிக்கை கவலையளிப்பதாக ஹக்காம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 31 ஜூலை வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, வெறும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஹக்காம் இந்த விவகாரத்தைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ எம் .இராமச்செல்வம் கூறினார (Makkal Osai, 19:48)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.

By Selvi Thirunavukkarasu · 14 Oct, 19:48 MYT

மலேசிய தேசிய மனித உரிமைகள் சங்கம் (ஹக்காம்), நாட்டில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புப் பேச்சு மற்றும் விரோதப் போக்கு குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிராகத் தாங்களே நீதி வழங்க முயலும் தனிநபர்களின் நடவடிக்கை கவலையளிப்பதாக ஹக்காம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 31 ஜூலை வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, வெறும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஹக்காம் இந்த விவகாரத்தைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ எம் .இராமச்செல்வம் கூறினார். ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாப்பது மற்றும் மியான்மருக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவது தன்னார்வமாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவது, சமூகத்தில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு சாதாரணமாகி வருவதைக் காட்டுகிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகச் செயல்பட முடியாது. குற்றச்சாட்டுகள் எதுவாகினும் அவை சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்; ஒரு முழு சமூகத்தையும் குறிவைக்கக் கூடாது.

வன்முறைச் சம்பவங்கள்: ஜோகூரில் ரோஹிங்கியா சமூகத்தினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் இத்தகைய விரோதப் போக்கின் ஆபத்தான விளைவை உணர்த்துகிறது. இத்தகைய வன்முறைகள் நிபந்தனையின்றி கண்டிக்கப்பட வேண்டும் . அகதிகளின் மனித உரிமை. ரோஹிங்கியா மக்கள் பத்தாண்டுகளாகத் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளைச் சந்தித்துவருகின்றனர். மலேசியாவில் அவர்கள் இருப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமையையோ கண்ணியத்தையோ பறித்துவிடாது.

பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதைக் கைவிட்டு, ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் உரிய சட்ட வழிகளில் புகார் அளிக்க வேண்டும் எனவும் ஹக்காம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, எளிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தலைவர் டத்தோ ஸ்ரீ எம். இராமச்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

The post நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை. appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow20:00
Latest 20:42 MYT
30New
Mentions / h1Velocity0.02/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
14 Oct, 19:48 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    19:48

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.