தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது
Only social or community posts, or a single source.
What happened
சபா மாநிலத்தின் இனானம் (Inanam) பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலின் போது, ஒருவரின் தலையில் தலைக்கவசத்தால் (helmet) தாக்கியதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞரின் தாயார் நேற்று மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 12:45 மணியளவில் துவாரன் (Tuaran) பகுதியில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினபாலு காவல் துறைத் தலைவர் ஷாருதின் மாட் ஹுசைன் தெரிவித்தார். (Makkal Osai, 13:50)
Read the reporting
1 reportதலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது
சபா மாநிலத்தின் இனானம் (Inanam) பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலின் போது, ஒருவரின் தலையில் தலைக்கவசத்தால் (helmet) தாக்கியதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞரின் தாயார் நேற்று மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 12:45 மணியளவில் துவாரன் (Tuaran) பகுதியில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினபாலு காவல் துறைத் தலைவர் ஷாருதின் மாட் ஹுசைன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களையும் நாங்கள் தேடி வருகிறோம் என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தண்டனைச் சட்டத்தின் (Penal Code) 324 மற்றும் 148-வது பிரிவுகளின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாருதின் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான இணையத்தில் பரவிய காணொளியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட நபர், ஒரு கும்பலால் தாக்கப்படுவதும் உதைக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. அக்கும்பலில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்ட நபரைத் தலைக்கவசத்தால் தாக்குவதையும், மற்றொருவர் அவரது தலையில் உதைப்பதையும் அக்காணொளியில் காண முடிகிறது.
The post தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai13:50
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.