
‘CHALO DELHI’.. உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் பேரணி! Chalo Delhi: Rahul Gandhi Supreme Court March
Only social or community posts, or a single source.
What happened
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி (CHALO DELHI) நடத்தத் திட்டமிட்டுள்ளன. (Google News Malaysia (TA), 12:31)
Read the reporting
3 reports
டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி ராகுல் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணி - என்ன நடக்கிறது? நேரலை
காவல்துறை தடுத்ததால் வேறு வழியில் உச்ச நீதிமன்றம் சென்ற தலைவர்கள் - புதிய மனு தாக்கல்

பட மூலாதாரம், Sajjad HUSSAIN/AFP via Getty Images
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி திலக் மார்க் வழியாக உச்ச நீதிமன்றத்தின் 'கேட் பி' நுழைவாயிலை அடைந்தனர்.
பிபிசி செய்தியாளர் திகவல்லி பவன் தெரிவித்துள்ளபடி, 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக ராகுல் காந்தியின் குழுவினர் தெரிவித்தனர்.
முன்னதாக, போராட்டக்காரர்கள் பகவான் தாஸ் மார்க் வழியாக உச்ச நீதிமன்றத்தை அடைய முயன்றனர், ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை; அப்போது தள்ளுமுள்ளு சம்பவமும் ஏற்பட்டது.

இந்தியா கேட் சர்க்கிள் பகுதியில் நிற்க காவல்துறை அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் அணிவகுப்பு மற்றொரு பாதையில் சென்றது. தற்போது, அனைத்துத் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் 'கேட் பி' நுழைவாயிலை அடைந்துவிட்டனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று வருகின்றனர்.
இதற்கிடையில், மாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்புவதாக பாஜக தலைவர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், ANI
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தை நோக்கிச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மண்டி ஹவுஸ் (Mandi House) அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது; அப்போது காவல்துறையினர் அவர்களைப் பின்னோக்கித் தள்ள முயன்றனர்.
பிபிசி செய்தியாளர் விஷ்ணுகாந்த் திவாரி அளித்த தகவலின்படி, சிறிது நேரம் சாலையில் அமர்ந்து போராடிய பிறகு, போராட்டக்காரர்கள் மாலை 6 மணியளவில் அங்கிருந்து திரும்பத் தொடங்கி இந்தியா கேட் பகுதியை நோக்கிச் சென்றனர்.

இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'லைவ் லா' மற்றும் 'பார் அண்ட் பெஞ்ச்' ஆகியவற்றின் தகவல்படி, வாக்காளர் பட்டியலின் 'சிறப்பு தீவிர திருத்த' (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்போது வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதாகவும், முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌகதா ராய், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்ட 11 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், ANI
பேரணி தடுத்து நிறுத்தப்பட்ட சாலையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளதாக பிபிசி செய்தியாளர் திகவல்லி பவன் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மண்டி ஹவுஸ் அருகே ராகுல் காந்தியின் வாகன அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாலும், போராட்டக்காரர்களைப் பின்னுக்குத் தள்ள காவல்துறையினர் முயன்றதாலும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
பகவான் தாஸ் சாலையில் கூடியுள்ள போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அங்கு பிஎன்எஸ்எஸ்-இன் பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பிபிசி செய்தியாளர் சுபாங்கி மிஸ்ரா தெரிவித்துள்ளபடி, போராட்டக்காரர்கள் கூட்டமாகச் சாலையில் அமர்ந்துள்ளனர்.

பட மூலாதாரம், REUTERS/Priyanshu Singh
முன்னதாக, பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா கூறுகையில், ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேருந்தில் ஏறி பாரகம்பா மெட்ரோ நிலையத்திற்குச் சென்றடைந்ததாகவும், பின்னர் அப்பேரணியில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
இப்பேரணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தில்நவாஸ் பாஷா தகவலின்படி, பாரகம்பா மெட்ரோ நிலையத்திலிருந்து மண்டி ஹவுஸ் செல்லும் சாலையில் மைல்கணக்கில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
காவல்துறையினர் முன்னால் தடுப்புகளை அமைத்துள்ளனர்; இந்தத் தடுப்புகளின் அருகே போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராகுல் காந்தியுடன் உள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, பாரகம்பாவிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை பேரணி நடத்த 'இந்தியா' (INDIA) கூட்டணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர்களும் இந்தப் பேரணியில் இணைந்ததைக் காண முடிந்தது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்தப் போராட்டப் பேரணியின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் மண்டி ஹவுஸ் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ஏராளமான மக்கள் கூடியிருப்பதைக் காண முடிகிறது.
கூட்டத்தில் உள்ள பலர் காங்கிரஸ் கொடிகளை ஏந்தியுள்ளனர்; முரசுகளின் சத்தமும் கேட்கிறது.
நடந்து சென்ற அத வேளையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் திறந்த வாகனத்தில் இருப்பதும் காணப்பட்டது; அந்த வாகனத்தில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் இருந்தனர்.


பட மூலாதாரம், REUTERS/Bhawika Chhabra
அங்கு இருந்த பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் கூறுகையில், போராட்டக்காரர்கள் பல நாட்களாகவே ஓரிடத்தில் கூட முயற்சி செய்து வந்ததாகவும், ஆனால் திங்களன்று கன்னோட் பிளேஸ் அருகே உள்ள பாரகம்பாவில் ஏராளமான மக்கள் கூடியதாகவும் தெரிவித்தார்.
அவரது தகவலின்படி, பேரணி தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகளின் தொண்டர்கள், போராட்டக்காரர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் அங்கு கூடியிருந்தனர்.
அங்கிருந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பேருந்தில் ஏறி உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் புறப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா மற்றும் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான அம்சங்கள் அடங்கிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை
ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை என்றும், அதற்குப் பதிலாக மூன்று புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராட்டங்கள் மற்றும் தர்ணாக்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், ராம்லீலா மைதானம், புராடி மைதான் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி (CBD) மைதான் ஆகியவை மாற்று இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, "குடிமக்களின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள இடங்களுக்கு மாற்றான இடங்களை ஆய்வு செய்யும் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது."
இந்த மூன்று இடங்களிலும் போராட்டங்கள் மற்றும் தர்ணாக்களை நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) தனியாக வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் நடந்தது என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நகரம் கடும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடனேயே விமானத்தில் வைத்து காவலில் எடுக்கப்பட்ட சி,ஜே.பி நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் சுமார் 24 மணி நேரப் தடுப்புக் காவலுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை மதியம் ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிரபல பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் மற்றும் அவருடன் வந்தவர்களை டெல்லி காவல்துறை காவலில் எடுத்தது. சுமார் 11 மணி நேரத் தடுப்புக் காவலுக்குப் பிறகு, அவருடன் பிடித்துச் செல்லப்பட்ட பிற எளிய மக்களும் விடுவிக்கப்படும் வரை அவர் காவல் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்து, இரவு 8 மணிக்கு அனைவருடனும் இணைந்து வெளியேறினார்.
சனிக்கிழமை ஒரே நாளில் 45-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதோடு, டெல்லிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் தொடர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
மத்திய டெல்லிப் பகுதிகள் முழுவதும் அடுக்கடுக்கான இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டதால், மருத்துவமனைகள் சென்று திரும்பிய முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஞாயிற்றுக்கிழமையும் CJP அழைப்பின் பேரில் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே சிறிய குழுக்களாகக் கனோட் பிளேஸ் மற்றும் ஜந்தர் மந்தர் எல்லைகளில் திரள முயன்றனர்.
சனிக்கிழமையன்று சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறன்றும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களைக் காவல்துறை காவலில் எடுத்தது.
மத்திய டெல்லியில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், இரண்டாவது நாளாகத் தலைநகரின் வணிக மையங்கள் முற்றிலுமாக முடங்கின.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN/AFP via Getty Images
மக்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்?
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிதான் இந்த சர்ச்சையின் அடிப்படையாகும். இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான வழக்கமான நடைமுறையே இது என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
இதுவரை வாக்காளர் பட்டியலிலிருந்து குறைந்தது 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலிலிருந்து தங்களது பெயர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதாக ஆயிரக்கணக்கானோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பல மாநிலங்களில் இந்த நடைமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் விதமானது, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சியும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன.
எதிர்க்கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையமும் பாரதிய ஜனதா கட்சியும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இருப்பினும், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் வெளியான புலனாய்வு அறிக்கை ஒன்று இந்த விவகாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இரு தேர்தல் ஆணையர்கள் '10 மாதங்களில் 14 முறை' அதிகாரப்பூர்வமாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்ததாக அந்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது, பல முக்கிய முடிவுகள் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய முடிவுகளுக்குத் தங்களது எதிர்ப்பைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களை இருட்டில் வைத்திருப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது முதல் 'அதிகாரப்பூர்வமற்ற, சட்டவிரோத' நடவடிக்கைகளைக் கேள்வி கேட்பது வரை பல விவகாரங்கள் இதில் அடங்கும்" என்று அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.
இந்த புலனாய்வு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகளும் காக்ரோச் ஜனதா கட்சியும் மேலும் வலுவாக்கியுள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
- Discussed in English, Tamil
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)12:31
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 3 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (4)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
