Malaysian Attention Engine
Live wire
55General : PN Deregistration Proves PAS' Failure To Manage Coalition - Azmin54Tampil mohon maaf atau bersedia bayar RM3juta – Peguam Ruhainies47Bapa reda pemergian anak perempuan selepas disahkan tercekik44Business : BNM Launches Scripless Securities Depository System To Support Tokenised Bond, Sukuk Issuance43Sport : Aichi-Nagoya 2026 Asian Para Games: Bonnie Retains 72 Kg Crown As Malaysia Claims Second Gold43Parlimen: KPM lulus projek bina semula bangunan daif di 455 sekolah42General : 'Saudi Visa Bio' App Being Continuously Improved For Pilgrims - Zulkifli42World : French PM Urges Targeted Curfews After Violent Weekend Protests40Sport : Lee Zii Jia Settles Suit With Family And Company Amicably39General : OTA: MOT To Hold Engagement Sessions With Express Bus Operators36T-Rex Dual Solar tawar hayat bateri sehingga 34 hari36General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am
OverUnconfirmedupdated 7 d ago

சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
6
10 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 23:23 MYTLatest activity 13 Oct, 09:30தமிழ்confidence 64%

What happened

சஞ்சு சாம்சன் மிரட்டல்... ஷாய் ஹோப் பதிலடி: 250 ரன்கள் இலக்கையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்! (Google News Malaysia (TA), 23:23)

Read the reporting

7 reports
Photo: etvbharat.com
etvbharat.com·News·தமிழ்·2 min read

சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

9 Oct, 23:23 MYT

சஞ்சு சாம்சன் மிரட்டல்... ஷாய் ஹோப் பதிலடி: 250 ரன்கள் இலக்கையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்!

இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ETV Bharat Sports Team author img
ETV Bharat Sports Team author img

Published : October 9, 2026 at 8:53 PM IST

|Updated : October 9, 2026 at 11:08 PM IST

ETV Bharat Choose ETV Bharat
ETV Bharat Choose ETV Bharat

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது.

இதில் அபிஷேக் சர்மா 20 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இஷான் கிஷனும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Muscular and Intentful 💪 Sanju Samson made full use of the Powerplay ✅ Updates ▶️ https://t.co/mZlyaWZsoe #TeamIndia | #INDvWI | @mflone\ | @IamSanjuSamson https://t.co/ATcAq8UAX2

— BCCI (@BCCI) October 9, 2026

தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே 7 ரன்களுடன் நடையைக் கட்ட, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என விளாசி 82 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இணையும் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Pulled Out His Trump Card! ♦️ #WhistlePodu #INDvWI https://t.co/f4fnGIz2tV

— Chennai Super Kings (@ChennaiIPL) October 9, 2026

பின்னர், 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான கமில் பூரன் 4 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மையர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் - ரோவ்மன் பாவெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்டும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ஷாய் ஹோப் மற்றும் ரூதர்ஃபோர்ட் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.

What. A. Delivery \|/ Express pace from Mayank Yadav 🚄 Updates ▶️ https://t.co/mZlyaWZsoe #TeamIndia | #INDvWI | @mflone\ https://t.co/Lyd3SOPwuN

— BCCI (@BCCI) October 9, 2026

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஷாய் ஹோப், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷாய் ஹோப் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பதிவு செய்தது.

The Skipper on fire from start to finish!🔥🔥🏏 #INDvWI | #MenInMaroon https://t.co/cG7kJ1eOFf

— Windies Cricket (@windiescricket) October 9, 2026

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Text and pictures from etvbharat.com, shown with attribution.Read at etvbharat.com

1 / 7 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source
  3. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 23:23 MYT
Origin confidence 60% · 4 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    23:23

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 6 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified

All sources (10)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.