
ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!
Only social or community posts, or a single source.
What happened
ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்! (Google News Malaysia (TA), 15:11)
Read the reporting
4 reports
ஆஸ்திரேலியா 'ஏ' அணியை வீழ்த்தி இந்தியா 'ஏ' அணி ஆறுதல் வெற்றி!
இந்திய 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

Published : October 11, 2026 at 5:12 PM IST

புதுச்சேரி: ஆஸ்திரேலியா 'ஏ' கிரிக்கெட் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில், இந்தியா 'ஏ' அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' கிரிக்கெட் அணி, இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாடியது. புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய 'ஏ' அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியிருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய 'ஏ' அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அதன்பின் 49 ரன்களில் பிரியான்ஷ் ஆர்யாவும், 39 ரன்களில் பிரப்சிம்ரன் சிங்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 2 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் படிதார், நிஷாந்த் சிந்து ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
A maximum to keep the momentum going! 💥 Will Suryansh Shedge and Vipraj Nigam take India A to a daunting total ? #INDAvAUSA | 3rd ODI | 👉 Streaming Live Now https://t.co/3kIOx6UojK https://t.co/9yzq3hSLX3
— Star Sports (@StarSportsIndia) October 11, 2026
பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்ஜே சிறப்பாக விளையாடி 66 ரன்களையும், விப்ராஜ் நிகாம் 40 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய 'ஏ' அணி 47.3 ஓவர்களில் 275 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய 'ஏ' அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ் மற்றும் வில் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 276 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு ஜோஷ் பிலிப் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய பிலிப், 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய லியாம் ஸ்காட் 26 ரன்களுக்கும், லச்லன் ஷா 31 ரன்களுக்கும், நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களுக்கும், நிகில் சௌத்ரி 29 ரன்களுக்கும், மிட்செல் ஓவன் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்களில் 226 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய 'ஏ' அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Another one bites the dust! 🔥 India A continue to tighten their grip on the match. ✊ #INDAvAUSA | 3rd ODI | 👉 Streaming Live Now https://t.co/3kIOx6UojK https://t.co/vRtmvgEjkJ
— Star Sports (@StarSportsIndia) October 11, 2026
இதன் மூலம் இந்திய 'ஏ' அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய 'ஏ' அணியை வீழ்த்தி, இத்தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும், இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)15:11
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 4 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (4)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
