சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை…
Only social or community posts, or a single source.
What happened
ரியாதசவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. (Makkal Osai, 15:15)
Read the reporting
1 reportசவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை…
ரியாதசவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமெரிக்காவின் படை தளங்கள் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ளன.
இந்த சூழலில், சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2 நாட்களாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில், கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
309 பேர் காயம்
இந்த தாக்குதலில், 309 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனால், விமான நிலையத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்தியர் பலி
இந்த சூழலில், சவுதி அரேபியா மீது 2-வது முறையாக நேற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்தது. பயணிகள் முனையத்தின் மீது நடந்த இந்த தாக்குதலில் அது தீப்பிடித்து எரிந்தது. இதில், இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவின் ஐதராபாத் நகரில் மேதிபட்டினம் பகுதியை சேர்ந்தவரான அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து உள்ளார். அவர் முகமது யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இவருடைய 2 மகன்கள் மற்றும் உறவினர் ஒருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 நாடுகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்க கூடிய அபாயம் உள்ள சூழலில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களுடைய குடிமக்களை சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்து இருந்தன.
இந்த பட்டியலில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளும் இணைந்துள்ளன. இதனால், சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாடுகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது 5 தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர். இதனால் விமான சேவையும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.
The post சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai15:15
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.