Malaysian Attention Engine
NewUnconfirmedupdated 1 h ago

பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு…

Only social or community posts, or a single source.

Attention
31
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 13 Oct, 07:30 MYTLatest activity 13 Oct, 07:30தமிழ்confidence 60%

What happened

திருவனந்தபுரம்,கேரள முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (Makkal Osai, 07:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு…

By tamil · 13 Oct, 07:30 MYT

திருவனந்தபுரம்,கேரள முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில், 2016 – 26 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். அப்போது 2017ல் அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான தற்போது செயல்பாட்டில் இல்லாத ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற ஐ.டி., நிறுவனத்துக்கு எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல் 2.78 கோடி ரூபாயை, சி.எம்.ஆர்.எல்., எனப்படும், ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல்லிமிடெட்’ நிறுவனம் வழங்கியது, வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்தது.

இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த அமலாக்கத் துறை, பினராயி விஜயன், வீணா, அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் தொடர்புடைய இடங்களில், கடந்த மே மாதம் சோதனை நடத்தியது. கேரளாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி, கடந்த மாதம் மாநில போலீசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. எனினும், காங்., அரசு தீவிரம் காட்டவில்லை.

‘சி.எம்.ஆர்.எல்., — எக்ஸாலாஜிக்’ நிறுவன லஞ்ச வழக்கில், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி, வழக்கறிஞர் கே.எம்.ஷாஜஹான் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, நீதிபதி ஏ.பதருதீன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, ‘தாங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பினராயி விஜயன், அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியலாம். ஆனால், கேரள போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர்’ என, அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ‘அமலாக்கத் துறையின் அறிக்கை மட்டுமே எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போதுமானதாக இருக்காது. மாநில போலீசார் முறைப்படி முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டியது அவசியம்’ என்றனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.பதருதீன், பினராயி விஜயன், வீணா உட்பட குற்றம் சாட்டப்பட்டோர் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர்., பதிய உத்தரவிட்டார்.

இந்தநிலையில், அமலாக்கத்துறை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிய உத்தரவிட்டிருந்த கேரள ஐகோர்ட்டு, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் நிறுவனத்திடம் முறைகேடாக ரூ.2.78 கோடி நிதி பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow
Latest 07:46 MYT
31New
Mentions / h1Velocity0.02/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
13 Oct, 07:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    07:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.