Malaysian Attention Engine
Live wire
64Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara57World : Egypt President To Begin Two-Day State Visit To Malaysia55Suara pelajar, harapan untuk Belanjawan 202754RIM mohon Dana Eksport Muzik dalam Belanjawan 202752General : Budget 2027: Dzulkefly Vows To Complete 9,000 Contract-to-permanent Doctor Transitions51World : Russell Tops Sole Practice Session For F1 Singapore Grand Prix50Irene Sofiya maut dipukul batang besi sepanjang 96 sentimeter – Polis Johor49Belanjawan 2027: Bayaran balik PTPTN tangguh untuk gaji RM2,500 sebulan44General : Budget 2027: RM20 Bln Boost For SJKP Guarantee Fund To Help More First-time Homebuyers - Nga43Penamatan sistem doktor kontrak perlu telus, garis masa jelas dan adil - Hartal Doktor Kontrak42Syarikat perladangan Malaysia di luar negara wajib patuhi undang-undang, cegah dan kawal kebakaran - KPK42General : Budget 2027: PTPTN Loan Repayments Deferred For Borrowers Earning Below RM2,500
NewConfirmedupdated 4 h ago

பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார்

Reported by two or more established outlets, or an official source.

Attention
21
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
3
3 mentions
Platforms
1
News
First detected 8 Oct, 18:42 MYTLatest activity 9 Oct, 18:17தமிழ்confidence 58%

What happened

பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார் (Google News Malaysia (TA), 18:42)

Read the reporting

1 report
Photo: cinema.dinakaran.com
cinema.dinakaran.com·News·தமிழ்·2 min read

பிரபல நடிகர் நானா படேகர் திடீர் மரணம்

9 Oct, 03:43 MYT

மும்பை: பிரபல நடிகர் நானா படேகர் (75), நேற்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச்செய்தி அறிந்து இந்திய திரையுலகினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்தி, மராத்தி, கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து, இந்தியா முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நானா படேகர்.

நேற்று அதிகாலை கோவா டோனா பவுலா பகுதியிலுள்ள தனது வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்த அவரை, உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்தார். நானா படேகர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

தொடர்ந்து 45 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரது உயிரை மீட்க முடியவில்லை. முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில், கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ மற்றும் சட்டரீதியான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நானா படேகரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

கடந்த 1951 ஜனவரி 1ம் தேதி பிறந்த விஸ்வநாத் படேகர் என்ற இயற்பெயர் கொண்ட நானா படேகர், கடந்த 1978ல் வெளியான ‘கமன்’ என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து இந்தி, மராத்தி, ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்தார். ‘வெல்கம்’, ‘வெல்கம் பேக்’ ஆகிய படங்களில் உதய் ஷெட்டி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்திய திரையுலகில் நானா படேகரின் நடிப்புத்திறமையை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் 3 தேசிய விருதுகள் வென்றுள்ளார். மேலும், ஒ்ன்றிய அரசால் கடந்த 2013ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். நானா படேகர் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். கடந்த 2008ல் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜூன், காஜல் அகர்வால், ருக்மிணி விஜயகுமார் நடித்த ‘பொம்மலாட்டம்’ என்ற படத்தில், திரைப்பட இயக்குனராக முக்கிய கேரக்டரில் நடித்தார்.

பிறகு 2018ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். ரஜினிகாந்துக்கு எதிரான அவரது மிரட்டலான நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது 75 வயதிலும் நானா படேகர் திரைத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்தார். இந்த ஆண்டில் வெளியான ‘ஓ ரோமியோ’ என்ற இந்தி படத்தில் ஷாகித் கபூர், திரிப்தி டிம்ரி ஆகியோருடன் நடித்திருந்தார்.

அனில் கபூர் நடித்த ‘சுபேதார்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். வெப்தொடர்கள், டி.வி நிகழ்ச்சிகள், தொடர்கள், விளம்பரங்கள், மேடை நாடகங்கள் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கி வந்தார். தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்று பன்முகங்கள் கொண்டிருந்த அவர், முன்னாள் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக இருந்தாலும், எப்போதுமே நானா படேகர் எளிமையான வாழ்க்கையையே கடைப்பிடித்து வந்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். ‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘அப் தக் சப்பன்ஹீ’, ‘பிரஹார்’, ‘அங்கார்’, ‘வெல்கம்’ உள்பட பல்வேறு இந்தி படங்களில் அவரது நடிப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.

நானா படேகரின் திடீர் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1978ல் வங்கி அதிகாரியான நீலகந்தி என்பவரை காதலித்து மணந்தார் நானா படேகர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இதில் ஒருவர் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தார். மற்றொரு மகன் மல்ஹர் படேகர் நடிகராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து நானா படேகர் வாழ்ந்து வந்தார்.

\ சமூக சேவையில்...

நானா படேகர் தனது எளிமையான வாழ்க்கை முறைக்கும், சமூக சேவைக்கும் புகழ்பெற்றவர். பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க, அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கினார். ‘பாட்ஷாலா’ என்ற படத்தில் நடித்ததற்காக வாங்கிய முழு சம்பளத்தையும் 5 வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ்கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசு தொகையை, மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரண பணிகளுக்கு நன்கொடையாக அளித்தார்.

வறட்சியால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அவர் நிதியுதவி செய்தார். 2015 ஆகஸ்ட்டில் விதர்பா பகுதியை சேர்ந்த 62 விவசாய குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் காசோலைகளை வழங்கினார். அதே ஆண்டு செப்டம்பரில் மராத்வாடாவின் லாத்தூர், உஸ்மானாபாத் மாவட்டங்களை சேர்ந்த மேலும் 113 விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார்.

\ விவசாயிகளுக்காக...

கடந்த 2015 செப்டம்பரில், மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரேவுடன் இணைந்து ‘நாம் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை தொடங்கினார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். மேலும், #IcareIsupport என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொண்டு, மகாராஷ்டிரா வறட்சி நிவாரண பணிகளுக்காக நிதி திரட்டுவதிலும் நானா படேகர் முக்கிய பங்காற்றினார்.

Why it is new

  • 2 independent sources
  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 33NEWnow08:0011:0014:0017:0020:00
Latest 21:59 MYT
21New
Mentions / h0Velocity0.00/minSources2Platforms1

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source

Where it started

Google News Malaysia (TA) (News)
8 Oct, 18:42 MYT
Origin confidence 90% · 541 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    18:42

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 3 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • No open questions flagged by the rules.

All sources (3)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.