Malaysian Attention Engine
Live wire
56RIM mohon Dana Eksport Muzik dalam Belanjawan 202752Ibu dakwa hantaran WhatsApp sebar naratif kes Zara Qairina beri tekanan emosi512 pegawai SPRM, bekas pegawai diperintah bela diri kes rompak hampir RM950,00050King calls for schools to close if API stays above 150-180 for prolonged period46“Tenang, level kita bukan situ” - Kamal Adli nasihat pengikut tak terpengaruh provokasi netizen Indonesia, usah keruhkan hubungan45Buruh didakwa rogol, amang seksual anak tiri44Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok43Lelaki miliki 16 rekod jenayah lampau cedera ditembak, rakan wanita ditahan41General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am41Belanjawan 2027: Rakyat dijangka nikmati lebih banyak manfaat40PRN Melaka: PKR sedang muktamad calon, umum dua atau tiga minggu lagi38General : Selangor Postpones National Sports Day Celebrations Due To Haze
NewConfirmedupdated 1 h ago

“எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் உடன் பேசி தீர்வு காணுங்கள்” - டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

Reported by two or more established outlets, or an official source.

Attention
33
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
2
2 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 00:21 MYTLatest activity 9 Oct, 13:15தமிழ்confidence 67%

What happened

இந்தியாவில் இணையச் சேவைகள் வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்த நிலையில், எலான் மஸ்க் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் பேசி தீர்வு காணுங்கள் என மத்திய அரசிடம் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். (Google News Malaysia (TA), 00:21)

Read the reporting

2 reports
Photo: nakkheeran.in
nakkheeran.in·News·தமிழ்·1 min read

“எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் உடன் பேசி தீர்வு காணுங்கள்” - டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

9 Oct, 00:21 MYT

இந்தியாவில் இணையச் சேவைகள் வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்த நிலையில், எலான் மஸ்க் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் பேசி தீர்வு காணுங்கள் என மத்திய அரசிடம் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளதாவது, “செயற்கைக்கோள் இணைப்பு என்பது தவிர்க்க முடியாதது. குறைந்தபட்சம் எதிர்காலத்தில் காணக்கூடிய காலத்திற்காவது, ஸ்டார்லிங்க் (Starlink) இன் செயற்கைக்கோள் தொகுப்பை (constellation) எதனாலும் முறியடிக்க முடியாது. இந்தியாவில், தமிழ்நாடு போன்ற ஒரு முன்னேறிய மாநிலத்தில்கூட, குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் போன்ற சவாலான நிலப்பரப்புகளில் இணைப்பு வசதி இடைவெளிகள் உள்ளன. ஆப்டிகல் ஃபைபர் (நார் இழை) மற்றும் கோபுரங்களால் மட்டுமே அனைத்துப் புவியியல் சார்ந்த சிக்கல்களையும் தீர்த்துவிட முடியாது.

உண்மை தான், தரவுப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தனியுரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால், புரட்சிகரமான தொழில்நுட்பத்தை வெறுமனே எதிர்ப்பதற்குப் பதிலாக, அதை முறைப்படுத்தும் திறன் நிச்சயமாக இந்தியாவிடம் உள்ளது. விலை நிர்ணயம், தனியுரிமை மற்றும் இந்தியாவுக்கான பிரத்யேகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை கவலைக்குரிய விஷயங்களாக இருந்தால், அவற்றை வெறுமனே தடை செய்வதற்குப் பதிலாக, எலான் மஸ்க் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஆகியோருடன் இது குறித்து உறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

நியூராலிங்க், போரிங், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களைப் போல தீர்வுகளைக் காணக்கூடிய ஒருவரால், நமது குறிப்பிட்ட கவலைகளுக்கும் நிச்சயமாக ஒரு தீர்வைக் காண முடியும்! ஆனால் ஒருவேளை டெல்லியின் நிர்வாகத்திற்கு அது முடியாமல் போகலாம். பழைய சந்தைக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தடுக்காதீர்கள். அதை இந்தியாவின் நலனுக்கு ஏற்றவாறு வடிவமைத்திடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. மேலும், இந்திய அரசின் அனைத்து விதமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்றப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. அப்படியிருக்க, இன்னும் ஏன் அதற்கு உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?” எனக் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Text and pictures from nakkheeran.in, shown with attribution.Read at nakkheeran.in

1 / 2 · arrow keys switch reports

Why it is new

  • 2 independent sources, 1 new in the last hour
  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 34first news pick-upNEWnow08:0011:0014:00
Latest 14:06 MYT
33New
Mentions / h1Velocity0.02/minSources2Platforms1

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. News
    First news outlet reports it (Makkal Osai) source

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 00:21 MYT
Origin confidence 90% · 774 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    00:21

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 2 established outlet(s): Google News Malaysia (TA), Makkal Osai

What we don’t know

  • No open questions flagged by the rules.

All sources (2)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.