நீர் பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவோம் – சந்திரபாபு நாயுடு உறுதி…
Only social or community posts, or a single source.
What happened
விஜயவாடா, ஆந்திரா சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய், அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் இணைப்பு மற்றும் கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அம்மாநில பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சியான விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது; (Makkal Osai, 07:30)
Read the reporting
1 reportநீர் பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவோம் – சந்திரபாபு நாயுடு உறுதி…
விஜயவாடா, ஆந்திரா சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய், அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் இணைப்பு மற்றும் கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அம்மாநில பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சியான விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது;
முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி
”தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை விஜயவாடாவில் வைத்து சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் சென்னைக்கு தேவைப்படும் குடிநீர் பற்றி இருவரும் விவாதித்தோம். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் குறித்தும் ஆக்கப்பூர்வமாக ஆலோசித்தோம்.
தண்ணீரை உறுதியாக வழங்குவோம்
இந்த ஆண்டு இதுவரை ஆந்திரப் பிரதேசம் சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை வழங்கியுள்ளது. ஆந்திராவிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தமிழகத்திற்கு உதவ உறுதிப்பூண்டுள்ளோம். தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குவோம். தண்ணீர் என்பது மோதலுக்கான காரணமாக இல்லாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.
மத்திய அரசின் ஆதரவுடன் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம், தண்ணீர்ப் பற்றாக்குறையை தீர்க்க வழிவகுக்கும். இதன் மூலம் விவசாயத்தை மாற்றியமைக்கவும், தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு செழிப்பை கொண்டுவரவும் முடியும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
The post நீர் பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவோம் – சந்திரபாபு நாயுடு உறுதி… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai07:30
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.