
‘தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏதும் இல்லை; சன்ன ரகம் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது’ - ஆலை உரிமையாளர்கள் தகவல்
Only social or community posts, or a single source.
What happened
‘தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏதும் இல்லை; சன்ன ரகம் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது’ - ஆலை உரிமையாளர்கள் தகவல் (Google News Malaysia (TA), 02:40)
Read the reporting
1 report
‘தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏதும் இல்லை; சன்ன ரகம் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது’ - ஆலை உரிமையாளர்கள் தகவல்
தமிழகம்
‘தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏதும் இல்லை; சன்ன ரகம் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது’ - ஆலை உரிமையாளர்கள் தகவல்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்.
மதுரை: தமிழகத்தில் சன்ன ரக அரிசி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் சஙகத்தின் தலைவர் தினேஷ் சிங், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சிவலிங்கராஜா ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் பெரிதும் விரும்பி உபயோகிக்கும் சன்ன ரக அரிசி தேவைக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவையே நம்பியே இருக்கிறோம். எல்-நினோ தாக்கத்தால், தமிழகத்தில் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி குறைந்துள்ளது.
எப்போதும் பயிரிடும் சுமார் 4.57 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பதிலாக சுமார் 3.38 லட்சம் ஏக்கர் மட்டுமே பயிரிட முடிந்தது. அதேபோல், அண்டை மாநிலங்களிலும் நெல் பயிரிடும் அளவு குறைந்ததால் வரத்து 30 சதவீதமாக குறைந்துள்ளது.
எனவே, இந்த ஆண்டு தேவைக்கு நெல் கிடைக்காமல் சன்ன ரக அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையானது வரும் சம்பா சாகுபடியின் அறுவடைக்காலமான தை மாதத்தில் இயல்பு நிலைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, அரிசி விலை உயர்ந்துள்ளதே தவிர, எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. மத்திய, மாநில அரசின் கிட்டங்கிகளிலும் தேவையான அரிசி இருப்பு உள்ளது.
சன்ன ரக நெல்லை விவசாயிகள் கூடுதலாக பயிரிடுவதற்கு ஊக்கம் தரும் வகையில், அதற்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதை அரசு விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், தமிழக பருவநிலைக்கு ஏற்றவகையில் அதிக மகசூல் தரும் சன்ன ரக நெல்லை வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நெல் உலர வைக்கும் இயந்திரம், நெல் சேமிக்கும் கிடங்கு உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது சன்ன ரக நெல்லுக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்கும் நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்
Hindu Tamil Thisai
www.hindutamil.in
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)02:40
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 2 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (3)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

