Malaysian Attention Engine
Live wire
59Irene Sofiya maut dipukul batang besi sepanjang 96 sentimeter – Polis Johor51Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok50Cubaan seludup syabu: Jet peribadi disewa RM200,00046Selangor tangguh sambutan Hari Sukan Negara susulan jerebu45Upah RM1,000 jadikan pelancong warga India keldai dadah45RIM mohon Dana Eksport Muzik dalam Belanjawan 202745CelcomDigi tawar pas perantauan serendah RM1045Sewa RM200 sebulan, warga asing bebas tunggang motosikal tanpa lesen44US to livestream Army execution of Fort Hood shooter, Pentagon official says44Warga asing guna ‘umpan’ individu lengkap lesen elak operasi JPJ44Khianat kedai serbaneka: Polis Sarawak kesan 8 individu44Kes bunuh Irene Sofiya: Reman remaja lelaki 16 tahun disambung 6 hari mulai esok
NewUnconfirmedupdated 8 h ago

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ அமெரிக்கா அதிரடி தடை- கிரீன் கார்டுக்கு சிக்கல் US Freezes Green Card Filings of TCS, Infosys, Wipro

Only social or community posts, or a single source.

Attention
14
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 04:08 MYTLatest activity 9 Oct, 04:08ENconfidence 60%

What happened

டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ, HCL உள்ளிட்ட 8 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய விண்ணப்ப நடைமுறையை அமெரிக்கா இன்று (அக்டோபர் 8) முடக்கியுள்ளது. (Google News Malaysia (TA), 04:08)

Read the reporting

1 report
Photo: minnambalam.com
minnambalam.com·News·EN·2 min read

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ அமெரிக்கா அதிரடி தடை- கிரீன் கார்டுக்கு சிக்கல் US Freezes Green Card Filings of TCS, Infosys, Wipro

9 Oct, 04:08 MYT

டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ, HCL உள்ளிட்ட 8 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய விண்ணப்ப நடைமுறையை அமெரிக்கா இன்று (அக்டோபர் 8) முடக்கியுள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், விசா நடைமுறைகளில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நிறுவனங்களுக்கு தடை?

மைக்ரோசாப்ட், அடோப், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, HCL டெக்னாலஜிஸ், கேப்ஜெமினி ஆகிய 8 நிறுவனங்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கிரீன் கார்டு பெற்றுத் தருவதற்காக புதிதாக அளிக்கும் விண்ணப்பங்களை ஏற்க மாட்டோம். ஏற்கெனவே அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் பரிசீலிக்க மாட்டோம் என்று அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் கீத் சோண்டர்லிங் அறிவித்துள்ளார்.

கிரீன் கார்டு விண்ணப்பங்கள் ஏன் முடக்கம்?

அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது, வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும் சம்பளமும் பாதிக்கப்படாது என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைதான் PERM.

ஆனால் சில நிறுவனங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க முறையாக முயற்சி செய்யாமல், தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மைக்ரோசாப்ட் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் இந்த நடைமுறையை அதிகமாகத் தவறாகப் பயன்படுத்திய நிறுவனம் மைக்ரோசாப்ட் என்று துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000 அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த அதே நேரத்தில், 6,300 H-1B விசாக்களையும் கிட்டத்தட்ட 3,000 கிரீன் கார்டுகளையும் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மைக்ரோசாப்ட், ஒரே மாதிரியான பணிகளை செய்யும் அமெரிக்க ஊழியர்களுக்கும் H-1B ஊழியர்களுக்கும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில் தாங்கள் தாக்கல் செய்த H-1B விண்ணப்பங்களில் சுமார் 80% ஏற்கெனவே பணியாற்றும் ஊழியர்களின் விசா நீட்டிப்பு அல்லது பணி நிலை மாற்றத்துக்கானவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

200 வழக்குகள் – அபராதம்

அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் ‘Project Firewall’ என்ற நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியது.

இதன் கீழ் சுமார் 200 வழக்குகள் தொடங்கப்பட்டு, பல மில்லியன் டாலர் அளவுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக வெளிநாட்டிலிருந்து புதிதாகப் பணியாளர்களை அழைத்து வருவதற்கான H-1B விண்ணப்பங்களுக்கு ஒருமுறை கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலர் விதிக்கும் அறிவிப்பையும் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

இந்திய நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

2009-ம் ஆண்டு முதல் இந்த 8 நிறுவனங்களும் சுமார் 30 லட்சம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதி கேட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களுக்கு 2.30 லட்சத்துக்கும் அதிகமான H-1B விசா ஒப்புதல்களும், கிரீன் கார்டு பெறுவதற்குத் தேவையான 1 லட்சத்துக்கும் அதிகமான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2026-ம் ஆண்டில் H-1B விசா மூலம் அதிக வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களில் அமேசான் முதலிடத்தில் உள்ளது. டாடா நிறுவனம் 2-வது இடத்திலும், இன்ஃபோசிஸ் 3-வது இடத்திலும் உள்ளன.

தற்போதைய தடையால் இந்த நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும்.

நாஸ்காம் விளக்கம்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் செயல்படும் இந்திய ஐடி நிறுவனங்கள் முன்பைவிட H-1B விசாக்களைப் பயன்படுத்துவதைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே PERM நடைமுறை மூலம் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை எவ்வளவு காலம் நீடிக்கும்?

இந்த நடவடிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து உறுதியான காலக்கெடு அறிவிக்கப்படவில்லை. தேவைப்படும் வரை தடை நீடிக்கும் என்றும், நிறுவனங்கள் தங்களது பணியாளர் நியமன நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்டு உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களிலும் விசாரணை

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான நடவடிக்கையுடன், அமெரிக்காவின் 9 முன்னணி பல்கலைக்கழகங்கள் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு, யேல், ஸ்டான்போர்டு, பிரவுன், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (MIT) உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியம் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கிரீன் கார்டு கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

Text and pictures from minnambalam.com, shown with attribution.Read at minnambalam.com

1 / 1 · arrow keys switch reports

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 19NEWnow08:0009:0010:0011:0012:0013:00
Latest 13:00 MYT
14New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 04:08 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    04:08

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.